வில்லியம் பூத் வாழ்க்கை வரலாறு

60

இரட்சணிய சேனை இயக்கத்தின் தலைவரான வில்லியம் பூத் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வறுமையில் வாழ்ந்தவர். அவரது குடும்ப சூழலில் கிறிஸ்தவ பக்தியில் வழி நடத்தகூட பெற்றோர் முன்வரவில்லை. ஐசக் மர்ஷ்டேன் என்ற நற்செய்தியாளரின் பிரசங்கங்கள் அவரை தொட்டது. அது அவருடைய இரட்சிப்புக்கும் மனந்திரும்புதலுக்கும் தூண்டுகோலாக அமைந்தன. தான் பெற்ற ரட்சிப்பின் சந்தோஷத்தை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தெரு பிரசங்கியாக மாறினார். பின் நாட்களில் நல்ல பிரசங்கியாக இது ஊன்று கோலாக அமைந்தது. இரட்சணிய சேனை என்னும் இயக்கத்தை நிறுவி பல்வேறு நாடுகளின் அந்த இயக்கம் செயல்பட ஆரம்பித்தது. அவரது வாழ்க்கை வரலாறு நம்மை ஊக்குவித்து உற்சாகமூட்டுவதாக உள்ளது.