111 ஒரு நிமிட தியானச் சுடர்

30

கர்த்தாவே…. உமது நாமத்திற்கு பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும் என்று தாவீது ஜெபிப்பதை காண்கிறோம். மனிதனுடைய மனது வினாடிக்கு விநாடி கிளைக்கு கிளை தாவிக்கொண்டே இருக்கும் குரங்குகளைபோல் இருக்கிறது. இவ்வாறு அலைபாயும் சிந்தனைகளை அடக்கி நமது இருதயத்தை ஒருநிலைபடுத்தி அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை ஆழ்ந்து சிந்திப்பதே தியானம். இச்சிந்தனைச் சுடர் ஒவ்வொன்றும் ஒரு நிமிடமே எனினும் ஆழ்நிலை தியானத்திற்கு எடுத்துச் செல்லும். கிறிஸ்துவின் கிருபையை சார்ந்துகொண்டு முயற்சியுங்கள், வெற்றி பெறுவீர்கள்.